போயஸ் தோட்டம் ஒரு தரம்.. 2 தரம்..3 தரம்.. விரைவில்!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படவுள்ளன.
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை விரைவில் ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 100 கோடி அபராதத் தொகையை கோர்ட் வசூலிக்கவுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லாததால் தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத் தொகை நிறுத்தி வைக்கப்படவில்லை. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.

ஜெயலலிதா தவிர்த்து மற்ற மூவருக்கும் அதாவது சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 130 கோடியை கோர்ட் வசூலிக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களை விற்று, அதாவது ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அபராதத் தொகை வசூலிக்கப்படவுள்ளது. தற்போது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளன. ஆனால் இதை விற்றால் ரூ.100 கோடி தேறாது. எனவே மேலும் பல சொத்துக்களை விற்றாக வேண்டும்.

ஜெயலலிதாவிடம் உள்ள சில சொத்துக்கள் குறித்த பட்டியல். தமிழக அரசு இவற்றை ஏலத்தில் விட்டு பணத்தை வசூல் செய்து பெங்களூர் தனி கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும்.
- 750 ஜோடி செருப்புகள் - மதிப்பு தெரியவில்லை
- 10,500 சேலைகள் - மதிப்பு தெரியவில்லை
- தங்க நகைகள் - சுமாராக ரூ. 3.5 கோடி.
- 500 ஒயின் கோப்பைகள் - மதிப்பு தெரியவில்லை
- வைர நகைகள் - ரூ 1 கோடி.
- போயஸ் கார்டன் வீடு
- கொடநாடு டீ எஸ்டேட்
- சிறுதாவூர் பங்களா - மதிப்பு ரூ. 55 கோடி
- பையனூர் பங்களா - ரூ. 13 லட்சத்திற்கு வாங்கப்பட்டது
இதுவிர மேலும் பலசொத்துக்கள் உள்ளன. இதில் எவை எவை ஏலத்திற்கு வரும் என்று தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications