தமிழகத்தை பதறடிக்கும் டெங்கு.. படு வேகமாக பரவுகிறது.. இன்று ஒரே நாளில் 8 பேர் மரணம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகியுள்ளது அதன் வீரியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சென்னை : தமிழகத்தில் இன்றும் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் டெங்கு குறித்த பீதியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வந்த போது உயிரிழப்புகள் நாள்தோறும் டெங்கு பீதியை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இன்றும் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தின் பல்வறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் மரணமடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதே போன்று திருச்சி மாவட்டம் துறையூர், சேலம் மாவட்டம் வாழப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒருவர், பூந்தமல்லியில் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். 10 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 8 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications