தக்காளி விலை தாறுமாறு... பார்த்தாலே கண்ணீர் வரும் சின்ன வெங்காயம் - விலை விர்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல நகரங்களில் தக்காளி கிலோ ரூ. 80க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ. 140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்துகுறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 20 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

Tomato and Vegetable prices hit in Tamil Nadu

கடந்த வாரம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. காய்கறிகளின் உச்ச பட்ச விலை உயர்வால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரட் கிலோ ரூ. 100

கேரட் விலை கிலோவுக்கு அதிரடியாக 30 ரூபாய் உயர்ந்து, ரூ.100க்கு விற்பனையாகிறது. அதேபோல பீன்ஸ் விலை கிலோ ரூ.80க்கு விற்பனையாகிறது.

சின்ன வெங்காயம் ரூ. 140

கடந்த வாரங்களை விட வெளி மாநிலங்களிலிருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருக்கிறது எனினும் சில்லறை விலையில் ரூ.140 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் கிலோ ரூ. 110க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் மற்றும் கொத்தவரங்காய் விலையும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

தாறுமாறு தக்காளி

தக்காளியின் விலைதான் திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் கிலோ 10 முதல் 15 ரூபாய் வரையே விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் திடீரென ரூ. 80 ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் கடும் விலை உயர்வு இல்லத்தரசிகளின் பட்ஜெட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tomato prices which have soared to Rs 80-100 per kg in retail markets across the state. Prices of vegetables have shot through the roof this past month, with the increase in the range of 25% to 200%.
Please Wait while comments are loading...