ஆஹாவென ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. வெண் நுரை பொங்க கொட்டும் நீர்.. குளிக்க தடை!
அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை: தமிழகமெங்கும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்தவாறே உள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வரும்காலங்களில் மழை குறித்த ரெட் அலார்ட் என்ற எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.
[ ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்! ]

போக்குவரத்து நெரிசல்
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டங்களின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ரெட் அலார்ட்
இந்நிலையில், தொடர் மழை காரணமாக தமிழகத்தின் முக்கிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியிலும் நீர் பெருக்கெடுக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் இங்க குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

சுருளி அருவி
அதேபோல, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 7-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சுருளி அருவியிலும் வெண்நுரை பொங்க வெள்ள நீர் ஓடுவதால் குளிப்பதற்கான தடை 2-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் முக்கிய அருவிகளில் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும், குளிக்க தடை விதிக்கப்பட்டு வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர்.

குற்றாலம் ஸ்பெஷல்
ஆனால் குற்றாலம் மட்டும் ஸ்பெஷல்! அங்கு குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் அங்கு கனமழை காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications