கனமழையால் துயர சம்பவம்.. கடலூர் மாவட்டத்தில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் கனமழை பெய்த நிலையில், திடீரென புளியமரம் சாய்ந்து மின் கம்பி அறுந்து விழுந்ததில், தம்பதி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டம் ஒரத்தூர் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சாத்தமங்கலம் அருகே இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சாலையோரம் நின்றிருந்த புளிய மரம் ஒன்று மின் கம்பி மீது விழுந்தது.
மரம் விழுந்ததால், மின் கம்பி அறுந்து கீழே விழுந்ததில், அங்கே நின்று கொண்டிருந்த மரிய சூசை (70), பிலோஸ் மேரி (60), வனதாஸ் மேரி (70) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications