திருச்சியில் கொட்டித் தீர்த்த மழை - ஒரே நாளில் 50 செ.மீ பெய்ததால் தத்தளிக்கும் இயல்பு வாழ்க்கை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 செ.மீ அளவில் மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் நீர் சூழ்ந்து காணப்படுகின்றது.
வட கிழக்கு பருவ மழை காரணமாக திருச்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் காலை முதல் மாலை வரை அவ்வப் போது தூறிக் கொண்டே இருந்தது.

இரவு முழுவதும் மழை இல்லை. நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை துவங்கியது. மதியம் வரை விடாமல் பலமாக கொட்டியது. பின்னர் பிற்பகல் வரை விட்டு விட்டு லேசாக பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
மாநகர் பகுதியில் தில்லை நகர் மெயின் ரோடு, ஐயப்பன் கோயில் லாசன்ஸ் ரோடு, பாரதிதாசன்சாலை, பீமநகர் போன்ற பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீர் வடி கால்கள் ஆக்கிரமிப்பாலும், தூர்வாரப்படாததாலும் இந்த நிலை இருப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த தொடர் மழையால் மாநகரில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளன.
பிரதான சாலைகளான பாரதிதாசன் சாலை, தில்லை நகர் மெயின் ரோடு, பாரதியார் சாலை போன்றவையும் இந்த மழைக்கு தப்பவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
துப்பாக்கி தொழிற் சாலை பகுதியில் பெய்து வரும் மழை நீர் மேட்டு கட்டளை வாய்க்கால் அடியில் உள்ள சைபன் வழியாக அண்ணாநகர் 2 வழியே உப்பாற்றில் கலந்து விடும். அந்த வழியை வீட்டு வசதி வாரியம் மூடியதால் மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் வீடுகளில் புகுந்து விட்டது. இதனால் சைபன் குமி ளியை தூர் வார வேண் டும் என்று மக் கள் கோரிக்கை விடுத்தனர்.
முகூர்த்த நாள் என்பதால், நேற்று திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் மழையால் அவதிப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 50 செ.மீ மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 70 மி.மீ பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications