நேரு கோஷ்டியின் புறக்கணிப்பு … வேறு தொகுதிக்கு பிரச்சாரம் கிளம்பிய திருச்சி சிவா
திருச்சி: திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவை, மாவட்டச் செயலாளர் கே.என். நேருவின் ஆதரவாளர்கள், புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சியில் மாவட்ட செயலாளர் நேருவின் ஆதிக்கத்தை தாண்டி எதையும் செய்ய முடியாது என்பதற்கு மற்றொரு உதாரணம் சிவாவின் நிலை.
திருச்சி சிவா... தி.மு.க-வின் கொள்கைப் பரப்பு செயலாளர். நல்ல பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்ததே, எனவேதான் மீண்டும் அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாவட்டச் செயலாளர் நேருவின் எதிர் கோஷ்டியில் சிவா இருக்கிறார்.
இப்போது திருச்சியில் லோக்சபா வேட்பாளராக நேரு கோஷ்டியைச் சேர்ந்த அன்பழகன் போட்டியிடுகிறார். ஆனால் அவர் மாவட்டச் செயலாளர் நேருவின் உத்தரவின் படி, இதுநாள் வரை சிவா உள்ளிட்ட எதிர் கோஷ்டியினர் சிலரை வேட்பாளர் பார்க்கவும் இல்லையாம்.
அது மட்டுமல்லாது திருச்சி சிவாவை பிரசாரத்துக்கு அழைக்கவும் இல்லையாம். இதனால் பொறுத்துப் பொறுத்துப்பார்த்த திருச்சி சிவா, அவரை அன்போடு அழைத்த மற்ற தொகுதி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய கிளம்பிவிட்டார். சிவாவின் கர்ஜனை திருச்சி தொகுதியைத் தவிர பிற தொகுதிகளில் கேட்கும் என்கின்றனர் சிவாவின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications