லாரி மீது மோதி அப்பளம் போல நொறுங்கிய அரசு பேருந்து ..6 பேர் பலி ..செங்கல்பட்டு அருகே பயங்கரம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் தொழுப்பேடு பகுதியில் லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் பத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Recommended Video
சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்

பேருந்து இடது பக்கமாக வேகமாக சென்ற போது லாரி மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பேருந்தின் ஒரு பக்கம் அப்பளம் போல நொறுங்கி சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த பேருந்தில் இருந்து உடல்கள் மற்றும் பயணிகளை மீட்க தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் 11 பேர் பலியாகி உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications