எதிர்க்கட்சிகளை தொடர்ந்து ஆளுநர் ஆய்வு நடத்துவதற்கு தினகரனும் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சிகளை தொடர்ந்து தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்த டிடிவி தினகரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

TTV Dinakaran also opposing the Governor's inspection

மாநில சுயாட்சி உரிமையில் தலையிடுவதாக கூறி ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களில் திமுக உள்ளிட்ட கட்சியினர் கறுப்புக்கொடியை காட்டி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு செய்ய டிடிவி தினகரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்,

அப்போது ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று அவர் கூறினார். முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் நலனை பற்றி கவலைப்பட வில்லை என்றும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
TTV Dinakaran has joined other parties to oppose Governor's inspection in Disricts. While addressing the media in Kumbakonam he said that, Governor's inspections are against State rights. So He should abandon his inspection tours.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற