21வது நூற்றாண்டிலேயே மிகப் பெரிய ஜோக் எது தெரியுமா?.. ஜெயக்குமார்
3 எம்பிக்கள் அணி மாறியது தொடர்பாக தினகரன் கூறுவது 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிட நான் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறும் தகவல் உண்மையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரு அணிகள் சார்பில் தினகரனும், மதுசூதனனும் போட்டியிட்டனர். ஆனால் பணப்பட்டுவாடா காரணமாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தினகரனை அதிமுகவினர் ஒதுக்கி வைத்துள்ளதால் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு நேற்று கூடியது.

முதல்வர் அணியில் 3 எம்.பி.க்கள்
எனினும் மதுசூதனின் வயதை கணக்கில் கொண்டு அவரை வேட்பாளராக அறிவிக்க அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சேபம் தெரிவித்தார் என்று செய்திகள் வந்தன. இதனிடையே தினகரன் அணி எம்.பி.க்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுவை எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகிய 3 பேர் முதல்வர் அணிக்கு தாவினர்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இதுகுறித்து டிடிவி தினகரன் பேட்டி அளித்தபோது அந்த 3 பேரும் என்னிடம் கூறிவிட்டே அணி மாறினர். இரட்டை இலைக்கு நான் ஸ்டே வாங்கிவிட்டால் மீண்டும் இங்கு வந்துவிடுவர் என்றார். இதையடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது.

நான் எதிர்க்கவில்லை
தன்னிடம் கூறிவிட்டே 3 எம்பிக்கள் அணிமாறினார் என டிடிவி கூறுவது 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த ஜோக். போகாத ஊருக்கு வழி தேடுகிறார் தினகரன். மதுசூதனன் போட்டியிட நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்ற தகவல் பொய்யானது.

அது புரளி
அதிமுகவில் சலசலப்பு என்று வெளியிருப்பவர்கள்தான் கூறுகின்றனரே தவிர உள்ளே இருப்பவர்கள் யாரும் கூறவில்லை. எனவே அதிமுகவில் பிரச்சினை என்பதெல்லாம் பொய். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி பெறுவர் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications