ஃபெரா வழக்கில் தண்டனை பெற்ற டிடிவி தினகரன் வேட்புமனுவை ஏற்கக் கூடாது... ஹைகோர்ட்டில் அதிரடி மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஃபெரா வழக்கில் தொடர்புடைய டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்யவுள்ள வேட்புமனுவை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தொடரப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடவுள்ளார். ரூ. 31 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் தொடர்புடையவர் என்பதால் அவருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

TTV Dinakaran's nomination should not be accepted... plea filed in Chennai HC

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இதேபோல் ஃபெரா வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது முரணானது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். ஃபெரா வழக்கில் தொடர்புடைய தினகரனின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி சென்னை ஹைகோர்ட்டில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வேட்புமனுவை ஏற்க கூடாது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட தடை என்ற தேர்தல் விதியை திருத்தி வழக்கில் தொடர்பிருந்தாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ போட்டியிடக் கூடாது என உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran should not be contested in RK Nagar byelection and also his nomination also should not be accepted, plea filed in Chennai HC.
Please Wait while comments are loading...