டிசம்பர் 5ல் ஜெ. சமாதி நோக்கி அமைதி ஊர்வலம்... டிடிவி தினகரன் அறிவிப்பு!
டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவுதினத்தன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை : டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா நினைவுதினத்தன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : இந்திய அரசியலில் நிகரில்லாத தலைவராகவும், பன்னாட்டு தலைவர்கள் போற்றியவருமான ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் டிசம்பர் 5ம் தி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் ஜெயலலிதா சமாதி வரை மவுன ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவின் பேரில் இந்த மவுன் அஞ்சலி ஊர்வலம் நடக்கும். மேலும் ஊர்வலத்தின் இறுதியில் ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து, உறுதி மொழி ஏற்கப்படும். டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications