முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது!
கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கரூர்: தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்ட விழா நடத்த அனுமதிஅளிக்காததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
டிடிவி. தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்படி கரூரில் தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட நிர்வாகம், போலீசாரிடம் அனுமதி கோரி இருந்தார்.

இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தை நாடி செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வாங்கியுள்ளார். இந்நிலையில் கெங்கமேடு சாலையில் மேம்பாலச்சுவர் மீது பொதுக்கூட்டத்திற்கான சுவர் விளம்பரம் செய்ய செந்தில்பாலாஜி முயற்சித்துள்ளார்.
இதனையறிந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆட்கள் அங்கு கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாக்குவாதத்தால் கெங்கமேடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் எம்ஜிஆர் விழாவிற்கு போலீசார் அனுமதி கொடுக்காததை கண்டித்து செந்தில் பாலாஜி இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் செந்தில் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications