தூத்துக்குடியில் கார்பைடு மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும், கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவு துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது.

சுகாதாரமான முறை:
சாதாரணமாக மாம்பழத்தை பறித்து சாக்குகளில் அடைத்து வைத்தால் பழுக்க 15 நாட்கள் ஆகும். இந்த மாம்பழங்கள் சுவையுடனும், சுகாதாரமாகவும் இருக்கும். இந்த முறையில் தான் வீடுகளில் பழுக்க வைப்பார்கள்.

கார்பைடுகல் மாம்பழங்கள்:
ஆனால், வியாபாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பது தான் வழக்கம். இந்த மாம்பழங்களுக்கும் சுவை இருக்கும். ஆனால் இவை உடலுக்கு கேடு விளைவிப்பவை. இது குறித்து புகார் அடிக்கடி அதிகாரிகளுக்கு பறந்து வந்தது.

அதிரடி சோதனை:
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் பழக்கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குடோன்களில் சோதனை:
தூத்துக்குடி-பாளை ரோட்டில் உள்ள கடையிலும், அதன் குடோன்களிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மாங்காய்களுக்கு மத்தியில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சட்ட விரோதமாக ரசாயான முறையில் ஸ்பிரே மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன்னுக்கும் மேலான மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாம்பழங்கள் பறிமுதல்:
இதன் மதிப்பு ரூபாய் 2.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பாதுகாப்பாக தருவைகுளம் செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்குக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

பல்வேறு பாதிப்புகள்:
இந்த பழங்களை சாப்பிடுவதால் குடலில் புண் ஏற்படும். செரிமான கோளாறு உண்டாகும். இப்படி பல்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இது நெல்லை மாவட்டத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications