ஒரே நாளில் 1.62 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 1.62 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுக சபை தலைவர் ஆனந்த சந்திரபோஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி துறைமுகம் கடந்த 15-ம் தேதி ஒரே நாளில் 1,61,935 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

Tuticorin harbour achieved on handing of cargos in large number in a day

இதற்கு முன்பு 10.8.2015-இல் 1,61,108 மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டது. அதிக அளவில் நிலக்கரி, அனல் மின் நிலைய கரி, கோதுமை, உரம், சுண்ணாம்பு கல், மற்றும் இதர சரக்குகளை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் வஉசி துறைமுகம் 38.45 மில்லியன் டன்கள் சரக்குகள் கையாண்டு 4.38 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுக துறை தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் ஓருமித்த உழைப்பால் இந்த சாதனை சத்தியமாகியுள்ளது. அவர்கள் இனி வரும் காலங்களில் இது போன்ற பல சாதனை தொடர துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
1.62 metric cargos were handled by Tuticorin port in a single day. It is a greatest achievement, says port trust officials.
Please Wait while comments are loading...