தூத்துக்குடி துப்பாக்கி சூடு வேதனை அளிக்கிறது.. சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி வேதனை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வேதனை அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 60 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போன பலர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலை செய்யப்பட்டவர்களின் உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என்று சங்கரசுப்பு என்ற வழங்கறிஞர் மனு அளித்து இருந்தார். உடற்கூறு சோதனையில் தவறு நடந்து இருக்கலாம், திருவனந்தபுரம், எய்ம்ஸ் மருத்துவர்கள் இல்லாமல் உடற்கூறு செய்தது தவறு என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த மனுவை விசாரித்தார். அதில் இறந்தவர்களின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் உடலை எத்தனை நாள் பாதுகாப்பது, என்று குறிப்பிட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வேதனை அளிக்கிறது. இந்த சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.13 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்று மிகவும் வருத்தத்துடன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications