எப்படி தீவிரவாதிகள் என்று கூறலாம்.. சென்னை கமிஷனருக்கு வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தீவிரவாதிகள் என கூறியதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தீவிரவாதிகள் என கூறியதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் ஆணையர் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மெரினாவில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நேற்று போலீசார் திடீர் தடியடி நடத்தினர். பெண்கள், தாய்மார்கள் முதியவர்கள் என்று பாராமால் காவல்துறையினர் சரமாரி தடியடி நடத்தினர்.

இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காவல்துறையின் இந்த தடியடி நடவடிக்கையால் சென்னை முழுவதும் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாநகரமே ஸ்தம்பித்து போனது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிர்க்கு இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் பேட்டியளித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் ஆணையர் ஜார்ஜ் தீவிரவாதிகள் என கூறியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியது என்? என்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். காவல் ஆணையர் ஜார்ஜின் பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications