இஸ்லாமியர்கள் வாக்கு.. விஜய்க்கு வந்த ஷாக் ரிசல்ட்.. பழைய திட்டத்தை முன்னெடுக்கும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி அமையும் என்று எதிர்பார்ப்பில் இருந்த போது, திடீரென திமுக கூட்டணியில் இருப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்தார். இதனால் மீண்டும் தவெக தலைவர் விஜய் பழைய திட்டப்படி மக்கள் சந்திப்பு பயணத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்.

கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பொதுவெளிக்கு வரவில்லை. ஒரு மாதத்திற்கும் மேலாக விஜய் வீட்டில் இருந்த போது, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே கரூர் சம்பவத்தின் போது ராகுல் காந்தி விஜய்யுடன் பேசி இருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூடுதல் நெருக்கம் காட்டி வந்தது.

TVK Vijay

அதற்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கிரிஷ் சோடங்கர் விஜய்யுடன் சந்திப்பு நடத்தியதே காரணமாக பார்க்கப்பட்டது. இருந்தாலும் காங்கிரஸ் தலைமை கூட்டணி விவகாரத்தில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. பீகார் தேர்தல் முடிவுகளை பொறுத்து கூட்டணியை உறுதி செய்யலாம் என்று காத்திருந்தது. ஆனால் பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை. ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்த போது, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகும் என்று கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறாது என்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 2 நாட்களில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை உறுதி செய்தது விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் இஸ்லாமியர்களின் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யலாம் என்று கணக்கு போட்டிருந்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி விலகி இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தைகளை பொங்கலுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவரை மக்கள் சந்திப்பு பயணங்களில் கவனம் செலுத்தலாம் என்று விஜய் தரப்பில் முடிவு செய்திருக்கிறது. அதற்கான முதல் கட்டமாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் விஜய் சந்திக்க உள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து டிசம்பர் 2வது வாரம் முதல் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொள்ள உள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின் தவெக அமைதியாகவே அரசியல் செய்து வருவதும், கூட்டணி அமையாததற்கு காரணம் என்று விஜய் நம்புவதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+