ஏட்டி, நேத்துதான் சொயம்புலிங்கம் அண்ணாச்சி குடும்பத்தோட தெங்காசி போய்ட்டு வந்தாரு.. தெரியும்லா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபநாசம் படத்தோடு மக்கள் எப்படி ஒன்றிப் போய் விட்டனர் என்பதை நேற்று டிவிட்டரில் நிரூபித்து விட்டனர். நேற்று மட்டுமல்ல இன்றும் கூட அது தொடர்கிறது... பாபநாசம் படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்து டிவிட்டரில் டிரண்டிங் ஆக்கி விட்டனர் பாபநாசம் மற்றும் கமல் ரசிகர்கள்.

பாபாசம் படத்தின் முக்கியக் காட்சியே அந்த தென்காசி செல்லும் தியானப் படலம்தான். அதை வைத்து படத்தின் அத்தனை கேரக்டர்களையும் சுற்ற வைத்து விடுவார் சுயம்புலிங்கம் என்கிற கமல்ஹாசன்.

தனது மூத்த மகள் செய்த எதிர்பாராத விதமான கொலையால் அதிர்ச்சி அடையும் சுயம்புலிங்கம் தனது குடும்பத்தோடு தென்காசிக்குப் போய் விடுவார்.. கொலை நடந்தபோது தாங்கள் யாருமே ஊரில் இல்லை என்ற அலிபியை உருவாக்குவதற்காக. அந்த அலிபியை உண்மையாக்க அவர் செய்யும் செயல்கள் படத்திற்கு உயிரோட்டமாக அமையும்.

பாபநாசம் படத்தின் பிரபலமான அந்த நிகழ்வை வைத்து டிவிட்டரில் நேற்று கமல் மற்றும் பாபநாசம் ரசிகர்கள் கலகலக்க வைத்து விட்டனர்.

ஆகஸ்ட் 2

ஆகஸ்ட் 2

ஆகஸ்ட், 2 இன்று நம்ம சுயும்புலிங்கம் குடும்பத்தோடு தென்காசிக்கு தியானத்திற்குப் போன நாள். இதுதான் டிவிட்டராட்டிகள் நேற்று போட்ட ஸ்டேட்டஸ்.

என்ன அண்ணாச்சி மறந்துட்டியளா

சுந்தர் கமல் என்பவர் போட்ட ஸ்டேட்டஸில் என்ன அண்ணாச்சி அதுக்குள்ள மறந்துட்டியளா... ஆகஸ்ட் ரெண்டாந்தேதி. தெங்காசில தியானத்துக்கு போயிட்டு வந்தோம் என்று சந்தோஷித்துள்ளார்.

தெர்ரிரிரி

வேழவேந்தன் என்பவர் போட்டுள்ள டிவிட்டில், பாபநாசம் கிளைமேக்ஸ்ல அந்தக் குழியைத் தோண்டிட்டு எல்லோரும் சேர்ந்து பின்னாடி கமல பாக்கறப்ப அந்த நேரத்துல கமல் விடுவாரு பாருங்க ஒரு லுக்கு.. தெர்ரிர்ரி என்று போட்டுள்ளார்.

ஆகஸ்ட் 2 தென்காசில இருந்தோம்

டிரோல் சினிமா போட்டுள்ள டிவிட்டில், ஐஜியாக நடித்த நடிகையின் படத்தைப் போட்டு ஆகஸ்ட் 2 தென்காசில இருந்தோம் என்று டிவிட்டரிலும் அவரை டென்ஷனாக்கியுள்ளார்.

நண்பர்கள் தினம் மட்டுமல்ல

மணி போட்ட டிவிட்டில், இன்று ஆகஸ்ட் 2, நண்பர்கள் தினம் மட்டுமல்ல. சுயும்புலிங்கம் குடும்பத்தோடு தென்காசிக்கு தியானத்துக்குப் போன நாள். நல்லதோர் குடும்பம் என்று போட்டுள்ளார்.

4 திருஷ்யம்.. ஆனால் ஒரே ஒரு பாபநாசம்

செந்தில் சுப்ரமணியம் போட்டுள்ள டிவிட்டில், நான்கு திருஷ்யம்.. ஆனால் ஒரு பாபநாசம் என்று போட்டு பாபநாசத்தை புகழ்ந்துள்ளார்.

என்ஜீனியர் பிரபு வெங்கடேஷ்

இவர் படத்தோட இன்னொரு பிரபலமான வசனத்தை போட்டுள்ளார். எல்லாமே பெர்பெக்டா இருக்குங்குறதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்துது.

ஆயிரம் கதை சொல்லும்

ஒரு படத்தின் வசனத்தையும், நிகழ்வையும் வைத்து நினைவு கூர்ந்து டிரெண்டிங் ஆக்கியது இதுதான் முதல் முறையா.. தெரிந்தவர்கள் கூறவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+