கொடுங்கையூர் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: மின்வாரிய அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அக்கா-தங்கை பலி | ONEINDIA TAMIL

  சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரில் பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை தவறுதலாக மிதித்தனர். இதில் சகோதரிகளான இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர்.

  Two girls dead by electricity attack in Kodungaiyur: 8 EB officials suspended.

  இந்த சம்பவத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கூறியிருந்தனர்.

  Two girls dead by electricity attack in Kodungaiyur: 8 EB officials suspended.

  இதுதொடர்பாக விசாரணை நடத்த அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டிருந்தார். மேலும் புகார் பெற்று நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுமிகள் உயிரிழந்தது குறித்து கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Two girls dead by electricity attack in Kodungaiyur Chennai. Two girls unknowingly trampled the electric wire front of the house. In this incident 8 EB officials suspended.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற