சிம்பு, அனிருத் மீது மேலும் இரு வழக்குகள்!
பெண்களை மிக ஆபாசமாகக் குறிப்பிட்டு பாடல் உருவாக்கிய சிம்பு மற்றும் அனிருத் மீது மேலும் இரு வழக்குகள் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று தொடரப்பட்டது.
இந்த இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஆபாச பாடலை பாடி வெளியிட்ட குற்றத்துக்காக சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதிபதி பிரியா இந்த வழக்குகளை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று வழக்கு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்படும்.
சென்னை மாநகரப் போலீசாரும்...
சென்னை போலீஸ் இதற்கிடையே சிம்பு, அனிருத் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டம் 67, இந்திய தண்டனை சட்டம் 292 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிம்பு, அனிருத் ஆகியோர் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications