போதைக்காக இதையெல்லாமா குடிக்கறது.. பரிதாபமாக பறிபோன 2 உயிர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: நன்னிலம் அருகே ஆரம்ப சுகாதார மையத்தில் போதைக்காக ஸ்பிரிட் வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

திருவாரூர் - புனவாசல் ஆரம்ப சுகாதார மையத்தில் கடந்த 22-ம் தேதி ராஜூ, கண்ணன், சதிஷ் ஆகிய மூன்று பேர் சட்டவிரோதமாக மருத்துவ ஸ்பிரிட் வாங்கியுள்ளனர்.

Two person died after drinking medical sprite for drugs near in Thiruvarur

அவர்கள் போதைக்காக அந்த மருத்துவ ஸ்பிரிட்டை குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ராஜூ, கண்ணன் ஆகியோர் இரண்டு பேரும் கடந்த 24-ம் தேதி உயிரிழந்தனர். சதீஷ் என்பவரின் உடல்நிலை மோசமானதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சமபவம் குறித்து ஆரம்ப சுகாதார மையத்தில் சட்டவிரோதமாக ஸ்பிரிட் வழங்கிய துப்புரவு பணியாளரிடம் கூத்தாநல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்காக மருத்துவ ஸ்பிரிட்டை வாங்கிக் குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two person died after drinking medical sprite for drugs near in Thiruvarur. Three were drunk sprite. two died on 24th and one person is hospitalized.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற