பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் மோதிய மாணவர்கள்.. 2 பேர் கைது!
பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட மாணவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் - கொரட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட மாணவர்கள் தாக்கியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், ரயில் நின்றதும், அதிலிருந்து பயணிகள் இறங்கியநிலையில், ஆயுதங்களுடன் ஓடிய 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றொரு மாணவர் கும்பலை சரமாரியாகத் தாக்கினர்.

காவல்துறையிடம் ஒப்படைப்பு
இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களை பயணிகள் மீட்டு அம்பத்தூர் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ரூட் தலை யார்?
ரூட் தலை யார் என்ற போட்டியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆயுதங்களுடன் ஓடிய மாணவர்கள்
ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓடும் காட்சிகள் பதிவானது. இதனை வைத்து மாணவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

2 பேர் கைது
இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications