என்ன கொடுமை... பெற்ற பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்து சம்பாதித்த தாய்கள்!
நாகர்கோவிலில் பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்து சம்பாதித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

நாகர்கோவில்: பிள்ளைகளை பிச்சையெடுக்க வைத்து சம்பாதித்த 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் பிள்ளைகளை வைத்து அவர்களது தாய் பிச்சையெடுக்கும் தொழில் செய்து வருவதாக அப்பகுதிக்கு காவ்துறைக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையில், ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலையில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது 2 பெண்கள் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இருப்பவர்களிடமும் பேருந்துகளில் அமர்ந்திருக்கும் பயணிகளிடமும் தங்களது பிள்ளைகளை பிச்சயெடுக்க வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து பஸ்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 12 வயது சிறுமி, 4 வயது சிறுமி, 10 வயது சிறுவன், 7 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் மீட்டனர். மேலும் அவர்களின் தாயார் 2 பேரையும் பிடித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

பள்ளியில் படிக்கும் க���ழந்தைகள்
பின்னர் அதிகாரிகள் அந்த 2 பெண்களிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரில் ஒருவர் வடக்கு வள்ளியூரை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் ராதாபுரத்தை சேர்ந்தவர் என்றும், இவர்களில் ஒருவருக்கு 8 மாத கைக்குழந்தை உள்பட 3 பிள்ளைகளும், மற்றொரு பெண்ணுக்கு 2 பிள்ளைகளும் இருப்பது தெரிய வந்தது.மீட்கப்பட்ட சிறுவர்களில் 4 வயது சிறுமியைத்தவிர மற்ற 3 பேரும் வள்ளியூர் கோட்டைய���ி பள்ளி மற்றும் ராதாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியிலும் படித்து வருபவர்கள் என்பதும், அவர்களை படிக்க விடாமல் அழைத்து வந்து பிச்சையெடுக்க வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தைகளை மயக்க நிலையில் வைத்து
பிடிபட்ட 2 பெண்களும் இருமல் மற்றும் காய்ச்சல் மருந்து வைத்திருந்தனர். குழந்தைகளை சில நேரங்களில் மயக்க நிலையில் இருக்க செய்ய அவர���கள் இந்த மருந்துகளை பயன்படுத்தியதும் அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.

2 பெண்களுக்கும் கடும் எச்சரிக்கை
இதையடுத்து சிறுவர்- சிறுமிகள் படித்து வந்த கோட்டையடி பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு 2 ஆசிரியர்களை வரவழைத்த அதிகாரிகள் அந்தப்பள்ளியில் 10 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமியும் தொடர்ந்து படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூறி அனுப்பி வைத்தனர்.ராதாபுரத்தில் படிக்கும் சிறுவனையும், அவனது 4 வயது சகோதரியையும் அங்குள்ள பள்ளியில் கொண்டுபோய் சேர்க்குமாறு அவர்களது தாயாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

குழந்தை திருமணம் தடுப்பு
8 மாத கைக்குழந்தையையும், தாயாரிடம் ஒப்படைத்த அதிகாரிகள் இனி குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் தொழிலை மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.மேலும் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்ததையும் கண்டுபிடித்த அதிகாரிகள் திருமண வயதை எட்டியப்பிறகுதான் திருமணம் செய்து வைக்க வேண்டும், சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications