For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அம்மா' இல்லாததால் தலைமைச் செயலக டைப்பிஸ்ட் கூட சரியா வேலை பார்க்க மாட்டேங்கிறாங்களே!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியின் ஏனோ தானோவை விளக்க இது சரியான ஒரு உதாரணமாக அமையும்.

தமிழக அரசு வெளியிடும் பத்திரிகைச் செய்திகளில் முன்பெல்லாம் ஒரு சிறு பிழை கூட இருக்காது. சுத்தமாக இருக்கும்.

ஆனால் இப்போது ஒரு பத்திரிகைச் செய்தியில் பெரிய பிழை கண்ணில் பட்டது. இதுதான் இந்த செய்தியின் முக்கிய அம்சமே.

"சூடான" செய்தி :

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை பத்திரிகைச் செய்தி கூட படு சூடாக இருக்கும். பார்த்துப் பார்த்து அறிக்கைகளை அனுப்புவார்கள்.

Typing error in government press release

ஒரே அடைமொழி மழைதான்:

முதல்வரின் பெயருக்கு முன்னால் ஏகப்பட்ட அடைமொழிகள் தவறாமல் இடம் பெறும். தவறுகளும் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

சோம்பல் முறிக்கும் நிர்வாகம்:

ஆனால் தற்போது ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் அரசு ஏனோதானோவென்று நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நிர்வாகத்திலும் கூட ஏனோ தானோ இருப்பதைக் காட்டுகிறது இந்த பத்திரிகைச் செய்தி.

பத்திரிகை செய்தி 514:

தமிழக அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி இது. வெளியீடு எண் 514 ஆகும். அக்டோபர் 11 ஆம் தேதி வெளியிட்டுள்ளனர்.

துணை ஆட்சியர்கள் தேர்வு:

54 புதிய துணை ஆட்சியர்கள் தேர்வு தொடர்பான செய்திக்குறிப்பு இது. இதில்தான் அந்தத் தவறு கண்ணில் பளிச்சென்று பட்டுள்ளது.

எமது செய்தியில் பிழையா?:

அதாவது துணை ஆட்சியர்கள் பயிற்சியினை திருப்திகரமாக நிறைவு செய்துள்ளனர் என்று வரும் வரியில்தான் பிழை உள்ளது.

"காரமாக" அடித்த டைப்பிஸ்ட்:

அதாவது திருப்திகரமாக என்று போடுவதற்குப் பதில் திருப்தி "காரமாக" என்று தவறுதலாக டைப் அடித்து விட்டனர்.

பாவம் போய்ட்டு போறாங்க:

அம்மா இல்லாததால் ஆட்சியில்தான் காரம் போய் விட்டது. இதிலாவது இருக்கட்டுமே என்று நினைத்து விட்டார்களோ என்னவோ.

English summary
There was a typing error in govt press release in the TN government portal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X