அணுமின் நிலையத்தில் பாகங்கள் தரமாக இல்லாததே விபத்துக்கு காரணம்: உதயகுமார்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மின்உற்பத்தியானது 900 மெகாவாட்டை எட்டியுள்ளது. அணு உலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை முதலாவது அணுஉலையில் திடீரென வெப்பநீர் செல்லும் குழாய் வெடித்தது. இதனால் குழாயில் இருந்து பீறிட்டு வெளியேறிய கொதிநீர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்கள் மீது பட்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 6 பேரும் உடனடியாக அணுமின்நிலைய வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் கூடங்குளம் போலீசார் அணுமின்நிலையத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கூடங்குளம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி வேட்பாளருமான உதயகுமார், ‘அணுமின் நிலையத்தில் பாகங்கள் தரமில்லாததே விபத்துக்கு காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்துக்கு அரசோ, அணுசக்தி கழகமோ இன்னும் பொறுப்பேற்கவில்லை என்றும் விபத்து குறித்து எத்தரப்பையும் சாராத விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும், அணுமின் நிலையத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications