உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு-கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு- ஒருவருக்கு ஆயுள்
தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
Recommended Video

திருப்பூர்: ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதே வழக்கில் மாரிமுத்து என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அலமேலு தீர்ப்பளித்தார்.

கூலிப்படை மூலம் கொலை
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.

அதிர்ச்சியில் தமிழகம்
இதில் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே இந்த ஆணவப் படுகொலை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குண்டாஸில் கைது
இவ்வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.

8 பேர் குற்றவாளிகள்
இதனை விசாரித்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ் இன்று தீர்ப்பளித்தார். கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் 8 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு அதிரடியாக தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள்: 1. சின்னசாமி 2. ஜெகதீசன் 3. மணிகண்டன் 4. மைக்கேல் 5. செல்வக்குமார் 6. தன்ராஜ் 7. தமிழ் கலைவாணன் 8. மணிகண்டன்

சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு
பின்னர் வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி அலமேலு அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
சின்னசாமியுடன் ஜெகதீஷ், மணிகண்டன், கலைதமிழ்வாணன், செல்வகுமார், மைக்கேல் என மொத்தம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications