காஷ்மீர் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடுகள்தான் காரணம்- என ஒப்புக் கொண்டது மத்திய அரசு- கார்கே
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலை சம்பவத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள்தான் காரணம் என்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் அதிமுக்கியமான பிரச்சனை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி ஏன் வரவில்லை? என்றும் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: மத்திய அரசாங்கம் அனைத்து கட்சி அரசியல் கூட்டத்தைக் கூட்டும் போது, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிரதமர் அதில் பங்கேற்க வேண்டும். ஆனால் காஷ்மீர் படுகொலை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது சரியானது அல்ல.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரதமர் மோடியோ, பீகார் மாநிலத்துக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்ய முடிகிறது. ஆனால் டெல்லிக்கு வந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்து இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ, என்னதான் ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்பதை விளக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏன் பிரதமர் மோடி செய்யவில்லை? எப்படி இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது? யார்தான் இந்த சம்பவத்துக்குப் பொறுப்பு? பாதுகாப்பு குறைபாடா? உளவுத்துறையின் குறைபாடா? காவல்துறையின் தோல்வியா? என்பதை அனைத்து கட்சிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா. ஆனால் அப்படிச் செய்யவில்லையே.. பிரதமர் மோடியே வரவில்லை.. பிறகு எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்?
டெல்லி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடு இருக்கிறது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புக் கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினோம். இனிவரும் நாட்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாது என அமித்ஷா உறுதியளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் கூட, பொதுமக்களைப் பாதுகாக்க முடியவில்லை. இந்த நாட்டைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த பிரச்சனையில் அரசாங்கத்துக்கு முழு ஆதரவை நாம் தருகிறோம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications