இதேமாதிரி தமிழ்நாடு முழுவதும் போயிட்டு வாங்களேன்.. கமலுக்கு பொன்.ராதா வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் இன்று காலையிலேயே துறைமுகப் பகுதியை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அரசியல் பேச்சுகளுக்கு பிறகு முதல் முறையாக களத்தில் குதித்த கமல்!- வீடியோ
Union Minister Pon Radha kirshanan welcomes Kamal visiting in Ennore port

கமலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டால் டெங்குவை தடுத்து விடலாம் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழக அரசு சர்க்கரை விலையை உயர்த்தியிருப்பது சாதாரண மக்களை பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister Pon Radha kirshanan welcomes Kamal visiting in Ennore port. He asked Kamal to visit across Tamilnadu to ccontrol dengue.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற