மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி.. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு புகழாரம்!
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நலம் விசாரித்தார்.
Recommended Video

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று 8வது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையின் காரணமாக கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
அவருடன் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது, மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி என சுரேஷ் பிரபு புகழாரம் சூட்டினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications