ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 21 நாட்களாக நீடித்த வடகாடு போராட்டம் தற்காலிக வாபஸ்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 21 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் அருகே வடகாட்டில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேசன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனிடையே மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நெடுவாசல் சென்று போராட்டக் குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் உறுதியை அடுத்து 22 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நல்லாண்டார்கொல்லை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புதுக்கோட்டை சார் ஆட்சியர் அம்ரீத் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, நல்லாண்டார்கொல்லை மற்றும் கருக்காகுறிச்சியில் ஓஎன்ஜிசி மூலம் அமைக்கப்பட்டுள்ள இரு ஆழ்துளைக் கிணறு களும் மூடப்படும். இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் வடகாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வடகாட்டைச் சுற்றியுள்ள ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் 21 நாட்களாக நீடித்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications