கோவில்பட்டி தொகுதியில் ஏப்.25ல் வைகோ வேட்புமனு தாக்கல்
சென்னை: கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் 25ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் வைகோ, தற்போது மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்குகிறது. கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் வைகோ 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
ஏப்ரல் 25 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கோவில்பட்டி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வைகோ வேட்புமனு தாக்கல் செய்கிறார். எனவே, ஏப்ரல் 26 ஆம் தேதி வரையிலும் அறிவிக்கப்பட்டு இருந்த வைகோவின் முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் ஒரு சிறிய மாறுதல் செய்யப்படுகிறது.
திருத்தப்பட்ட சுற்றுப்பயண விவரம்:
ஏப்ரல் 25 திங்கள் காலை கோவில்பட்டி வேட்புமனு தாக்கல் மாலை: சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் ஏப்ரல் 26 செவ்வாய் - பிற்பகல் 3 மணி முதல் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை. ஈரோடு மேற்கு தொகுதிகளில் சுற்றுப் பயணம் ஏப்ரல் 27 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உளுந்தூர்பேட்டை தொகுதி கிராம சுற்றுப்பயணம் தொடர்ந்து விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications