அப்பா நினைவுநாள்... 42வது ஆண்டாக வைகோ மௌன விரதம்!
Subscribe to Oneindia Tamil
தனது தந்தையாரின் நினைவுநாளை ஒட்டி இன்று ஒருநாள் மௌன விரதம் இருந்து வருகிறது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
வைகோவின் தந்தையார் வையாபுரி கடந்த 1973ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி காலமானார். அன்றிலிருந்து 41 ஆண்டுகளாக, தந்தையாரின் நினைவு நாளன்று மௌனவிரதம் கடைபிடித்து வருகிறார் வைகோ.

அதன்படி, இன்று கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் வைகோ மௌன விரதம் இருந்து வருகிறார்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் யாரிடமும் பேசாமலும், தண்ணீர்கூட பருகாமலும் அவர் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரச்சார காலங்களிலும் கூட அவர் மௌன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications