விக்னேஸ்வரன் முதல்வரானாலும் தமிழருக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை! - வைகோ
திருவட்டார்: இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பதவியேற்றிருப்பதால் ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது என வைகோ கூறினார்.
திருவட்டார் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் வீட்டின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவியேற்றதில் துளியளவும் மகிழ்ச்சி இல்லை.

காரணம், அவருக்கு ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? இலங்கை வடக்கு மாகாண தேர்தல் உலகை ஏமாற்றும் செயல்.
முள்ளிவாய்க்காலில் 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் அங்கு பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் உள்நாட்டு போரில் ரசாயன ஆயுத தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததை கண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவை தாக்க தயாராயின. ஆனால், லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்த இலங்கைக்கு இந்திய அரசு பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளது," என்றார்.
விக்னேஸ்வரனால் பயனில்லை...
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இலங்கை வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பு ஏற்றுள்ளதால் ஈழத்தமிழர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவது இல்லை. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே முன்னிலையில் நடந்த விழாவில்தான் அவர் பதவிப் பிரமாணம் பெற்றுள்ளார்.
இவரால் பிரயோஜனம் இல்லை என்று மக்களுக்கு தெரிந்திருந்தும் ஏன் வாக்களித்தார்கள் என்றால், ராஜபக்சே கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் வாக்களித்துள்ளனர்.
இலங்கையின் 13-வது சட்டதிருத்தத்தில் சொல்லப்பட்டிருந்த சட்டம், போலீஸ், நிலம் போன்றவை மக்களுக்கு தரப்படவில்லை. எனவே, புதிய அரசால் எதுவும் செய்யமுடியாது. தமிழர் வாழும் பகுதிகளை தகர்த்தும், உடைத்தும் புத்த வழிபாட்டு தலங்களாக மாற்றி வருகிறார்கள்.
இந்திய அரசே முக்கிய காரணம்
பிரபாகரன் கிளிநொச்சி பகுதியில் வசித்த பாசறையை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த இடத்தை வெற்றியின் அடையாளமாக காட்டிய இலங்கை அரசு, அந்த இடத்தை பார்க்கும் மக்களுக்கு மான உணர்வு மேலோங்கியதைக் கண்டு, குண்டு வைத்து தகர்த்துள்ளது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். ஆனால் அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இந்திய அரசு முக்கிய காரணமாக உள்ளது.
தீர்வு ஏற்படாது
மக்கள் இதை எதிர்த்து போராடுகிறார்கள். தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கிறார்கள். எனவே, இதைப் பார்த்து நாங்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு நாடகமாடினாலும் ஆடும்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 7-வது நாளாக தியாகு உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். அறவழியில் போராடும் இவரை அப்புறப்படுத்த கால்துறை முயற்சி எடுக்கக்கூடாது. மீறி அப்புறப்படுத்தினால் தமிழக அரசுதான் காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுவோம்.
மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளதால் எந்த தீர்வும் ஏற்பட்டு விடாது. துரோகிகள் கூடும் இடமாகத்தான் இலங்கை இருக்கும்," என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications