7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு: வைகோ, திருமா, பழ.நெடுமாறன், சீமான் வரவேற்பு !
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ , தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். 7 பேரை விடுவிக்கும் விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்கத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில்,தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியபோதும், 7 பேரையும் விடுதலை செய்வதற்கான இந்த முயற்சியை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருப்பது அவர்கள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது. மேலும் அரசியல் சட்டவிதி 161 ஐ பயன்படுத்தி மாநில அரசே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications