வீடு புகுந்து சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி... டிரைவர் கைது
காரைக்குடி: காரைக்குடி அருகே நள்ளிரவில் திறந்திருந்த வீட்டில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முற்பட்ட வேன் டிரைவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் (36), மினி சரக்கு வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ராமநாதன், வழியில் திறந்த நிலையில் கிடந்த வீட்டில் 11 வயது சிறுமி உறங்குவதைக் கண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த ராமநாதன் அச்சிறுமியைக் கடத்தி, தனது வேனில் அருகில் இருந்த லாரி செட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியைப் பலாத்காரம் செய்ய அவர் முயற்சித்துள்ளார்.
அப்போது சிறுமி அழுது தண்ணீர், தண்ணீர் என கத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து ராமநாதன் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட அச்சிறுமி அங்கிருந்து தப்பி, தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இதனைத் தெரிவித்துள்ளனர். விரைந்து செயல்பட்ட போலீசார் லாரி செட்டில் பதுங்கியிருந்த ராமநாதனைக் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் ராமநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சினிமா காட்சி போல் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications