பல பெண்களின் தொடர்பு.. படுகொலையான வி.ஏ.ஓ.. 2 பெண்கள் உள்பட மூவர் கைது
தூத்துக்குடி: கயத்தாறு அருகே கள்ள தொடர்பு காரணமாக கிராம நிர்வாக அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கீழயையம்பட்டியை சேர்ந்த சுருளி மகன் முத்து(30). இவர் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் தெற்கு மயிலோடுடையில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ராஜாபுதுக்குடியில் வசித்து வந்தார். மேலும் இதற்கு முன்பு பணியாற்றிய கொடியன்குளத்தை சேர்ந்த மாலா என்பவரையும் முத்து 2வது திருமணம் செய்து, மாலா மற்றும் 2 குழந்தைகளுடன் மேல இலந்தகுளத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கள்ளத் தொடர்பு
இந்நிலையில் முத்துவுக்கும் தலையால் நடந்தபுரம் ஊரைச் சேர்ந்த சுடலை (36) என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவருன் தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது. இதனை சுடலை கண்டித்தால் பேச்சியம்மாள் கணவருடன் சண்டைபோட்டு விட்டு அவரது வீட்டு அருகில் தனது பாட்டி வெள்ளையம்மாள் வீட்டில் குடி இருந்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி முத்து, தெற்கு மயிலோடையை சேர்ந்த சற்குணம் மகன் ஜான்(45) இருவரும் நேற்று நள்ளிரவில் தலையால் நடந்தபுரத்திற்கு சென்று பேச்சியாம்மாளை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர்.
அரிவாள் வெட்டு
இதனை பார்த்த வெள்ளைம்மாள் முத்துவை திட்டியுள்ளார். இந்நிலையில் பேச்சியாம்மளை முத்து தேடி வந்திருக்கும் தகவலை கேள்விப்பட்ட சுடலை அரிவாளுடன் வந்து முத்துவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்கு வாதம் முற்றவே கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துவை சராமாரியாக வெட்டி விட்டு சுடலை, தப்பியோடிவிட்டார். இதில் சம்பவ இடத்தில் முத்து துடிதுடிக்க பலியானார்.
மூவர் கைது
இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து வந்து முத்து உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சுடலை மனைவி பேச்சியம்மாள் (26), பேச்சியம்மாள் பாட்டி வெள்ளையம்மாள்(70), பேச்சியம்மாள் சகோதரன் உய்யக்காட்டன்(23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சுடலையை தேடி வருகின்றனர்.
பல பெண்களுடன் தொடர்பு
முத்துவுக்கு முதலில் சத்யாவுடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கொடியன்குளத்தில் பணிபுரிந்த போது ஏற்கனவே திருமணமாகி இருந்த மாலாவை தன்னுடன் சேர்த்து கொண்டுள்ளார். மேலும் பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஒரு மன்மத ராஜாவாக முத்து வலம் வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கையே அவரது உயிருக்கு உலை வைத்துவிட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications