கல்வி உரிமை மாநாடு: சேலத்தில் குவிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
சேலம்: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை மாநாடு இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சேலத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலத்தை அடுத்து உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கல்வி உரிமை மாநில மாநாட்டை இன்று மாலை நடத்துகிறது. இந்த மாநாட்டுக்கு சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் நாவசரன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தகனைகளுடன் மாநாட்டை நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து மாநாட்டிற்கு தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வர தடை விதித்து சேலம் மாவட்ட கலெக்டர் நேற்று மாலை 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து திருமாவளவன் கூறுகையில்,
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்பதை விட அரசியல் ரீதியாக பழி வாங்கவே இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு ஆயிரக்கணக்கான வாகனங்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதுடன் கட்சியினரையும் கைது செய்துள்ளனர். மேலும் தனியார் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களை போலீசார் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் கட்டுப்பாட்டை காப்பதுடன், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும் என்றார்.
மாநாட்டையொட்டி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதியிடம் வாழ்த்து
முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications