For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

Recommended Video

    போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிலை | jayalalithaa statue moved to poes-garden- Oneindia Tamil

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி இன்று திடீரென்று செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். அப்போது அவர் கூறுகையில், " ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக 6 முறை திறம்பட பணியாற்றி, தமிழ்நாட்டின் நலனுக்காக தன் இன்னுயிரை ஈந்துள்ளார்கள்.

     'Vedha Nilayam' Turned as Jayalalitha's Memorial place CM announced

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட உன்னத தலைவராய், அவர் அனைவர் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.

    ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' , இல்லத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜெயலலிதா அவர்களின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும், பொதுமக்கள் அறையும் வண்ணம், அம்மா அவர்கள் சிறப்பாக வாழ்ந்த , சென்னை போயஸ் தோட்டத்தில், அமைந்துள்ள 'வேதா நிலையம்' அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்." என்று தெரிவித்தார் முதல்வர்.

    English summary
    Tamil Nadu Chief Minister Edapadi Palanisamy announced, 'Vedha Nilayam' Turned as Jayalalitha's Memorial place to the press at Chennai Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X