கோடையில் நிரம்பிய வீராணம் ஏரி!: சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது!!
கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரியின் நீர் இருப்பு மொத்தக் கொள்ளளவான 47.5 அடியை எட்டியுள்ளது. மேலும், வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், கோடை முழுவதும் சென்னைக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு வீராணம் ஏரியில் கோடை காலத்தில் இந்தளவு தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.
ஏரியில் இருந்து குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு அதிக அளவு தண்ணீர் எடுக்கப்பட்டதால் ஏரி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

வீராணம் ஏரிக்கு தண்ணீர்
இதையடுத்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 17-ந்தேதி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்து கீழணை மூலமாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நிரம்பிய ஏரி
நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

குடிநீர் பஞ்சம் வராது
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால், கோடையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு, அந்த நிலை மாறியுள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.

குடிநீர் தரும் ஏரிகள்
சென்னையின் குடிநீர் தேவையை சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் பூர்த்தி செய்து வருகிறது. மேலும் மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து வடசென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும், நெமிலி கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து தென்சென்னை பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கிருஷ்ணா நீர் வருகை
தற்போது பெய்து வரும் கோடைமழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏரிகளின் நீர்மட்டம்
ஞாயிறு மாலை நிலவரப்படி 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 20.69 அடி நீர் இருப்பும், 17.86 அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 4 மில்லியன் கன அடி தண்ணீரும், 21.20 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 12.92 அடி தண்ணீரும், 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 960 மில்லியன் கன அடி தண்ணீரும் உள்ளது. 8.50 அடி கொண்ட வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு ஏரியும் காலத்திலும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications