வெள்ளத்திலிருந்து தப்ப... வீட்டு வாசலில் தடுப்புச் சுவர்.. இதுவும் வேளச்சேரிதான் #ChennaiRains2017

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன?-வீடியோ

  சென்னை: மழை வெள்ள நீர் வீட்டுக்குள்ளே புகுந்துவிடுவதை தடுக்க முன்யோசனை நடவடிக்கையாக சென்னை வேளச்சேரியில் ராம்நகரில் ஒரு வீட்டுக்கு முன்னால் தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளனர்.

  கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் பெரு மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் உடைப்பெடுத்துக் கொண்டு சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.

  இதனால் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இங்கு 6 முதல் 7 அடி தண்ணீர் தேங்கியது.

   உணவில்லாமல் தவிப்பு

  உணவில்லாமல் தவிப்பு

  கீழ்தளத்தில் இருந்தவர்கள் மொட்டை மாடிக்கு சென்று குடியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் உணவு இல்லாமலும் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் இருந்தனர்.

  ஏகப்பட்ட பாதிப்பு

  மழை நீர் சூழ்ந்ததால் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருள்கள் நாசமாகின. மேலும் கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சேதமாகி பெரும் பாதிப்பை உண்டாக்கின.

   வேளச்சேரியில் வெள்ளம்

  வேளச்சேரியில் வெள்ளம்

  கடந்த 4 தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

   வெள்ள நீரை தடுக்க

  வெள்ள நீரை தடுக்க

  இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள ராம் நகரில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அங்குள்ள சில வீடுகளில் வெள்ளம் நீர் உள்ளே புகவில்லை. அதற்கு காரணம் கடந்த 2015-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து காத்து கொள்ள வீட்டுக்கு முன் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.

   பின்வாசல் வழி பயணம்

  பின்வாசல் வழி பயணம்

  இதனால் தண்ணீர் அந்த சுவரை தாண்டி உள்ளே வரவில்லை. தடுப்புச் சவர் கட்டியதால் வெள்ள நீர் வராவிட்டாலும் பின்வாசல் வழியாக வாகனங்களை கொண்டு சென்று நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Some People belongs to Velacherry has built walls in front of their houses to protect themselves from flood water get inside.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற