எங்கும் வெப்ப அலை... பற்றி எரியும் திருவள்ளூர் 113 டிகிரி பாரன்ஹீட் - அனல் நீடிக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் எங்கும் காலை முதலே அனல் காற்று வீசுகிறது. தமிழகத்திலேயே திருவள்ளூரில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வெலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. அரியலூரில் -109 டிகிரியும்,நாமக்கல்லில் 108 டிகிரியும், கோபி, திருச்சியிர் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் வெளுத்து வாங்குகிறது. காலை முதலே அனல் காற்று வீசுவதால் வெளியில் தலைகாட்ட அஞ்சிய மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்

கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டாலும் கடந்த சில தினங்களாகவே அனல் காற்று வீசி வருகிறது. வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

நேற்று மாநிலத்தில் அதிகபட்சமாக, நேற்று திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வேலுாரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

110 ஆண்டுகளில் வெப்பம்

110 ஆண்டுகளில் வெப்பம்

சென்னையில் 110 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெப்பம் பதிவானது. மாநிலத்தின் இரண்டாவது அதிக பட்ச வெப்பநிலையாக, சென்னை, மீனம்பாக்கத்தில்,109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னையில் 1908ஆம் ஆண்டு 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. அதுவே, இதுவரை பதிவான அதிக பட்ச வெப்பநிலை. பத்து ஆண்டுகளில், இதுவே அதிக பட்சம்.

வெப்ப அலை

வெப்ப அலை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட குறிப்பிடப்பட்ட 18 மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இது பொதுமக்களை மேலும் அச்சுறுத்தியது. வாட்ஸ் அப்பில் வதந்தி வேகமாக பரவியது அதில் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் என்றும் அனல் காற்று வீசும் என்றும் பரவி பீதிக்கு ஆளாக்கியது.

18 மாவட்டங்களில் அனல் காற்று

18 மாவட்டங்களில் அனல் காற்று

இன்று அனல் காற்று வீசும் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குனர் ஜி.லதா நேற்று எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். பொதுமக்கள் யாரும் 12 மணியில் இருந்து 3 மணிக்குள் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரித்தனர்

திருத்தணியில் 113 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணியில் 113 டிகிரி பாரன்ஹீட்

மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருவள்ளூரில் 113 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசி திகுதிகு என எரிவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். திருத்தணியில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. அரியலூர் 109, நாமக்கல் 108 டிகிரி, திருச்சியில் 107 டிகிரியும் திருப்பத்தூரில் 106 டிகிரியும், தஞ்சாவூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் அனல் காற்று வீசுவதால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vellore residents were feeling the heat as the temperature rose to 110 degrees Fahrenheit on Tuesday.
Please Wait while comments are loading...