வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்... அனல் காற்றால் மக்கள் அவதி !
வேலூர்: வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், வெயிலின் தலைநகராக மாறி வருகிறது வேலூர். வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திர கால வெயிலை விட அனல் காற்று வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றாலே படபடப்பும், மயக்கமும் உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேலூரில் சராசரியாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெப்பம் காரணமாக, கடுமையான வெப்பக் காற்று வீசியது. அனல் காற்றுக்கு வேலூர்வாசிகள் அவதிக்கு ஆளாகினர். பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கும் சூழல் உருவாகியது. இதனால், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மே மாதத்தில் எப்படியிருக்குமோ, என்ற அச்சம் வேலூர் மக்களிடையே இப்போதே அதிகரித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications