For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி பட்டாசு தடையால், தமிழக பட்டாசு தொழில் நசுங்கும்... வேல்முருகன் வேதனை

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்துள்ளதற்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்துள்ளதற்கு தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழிக்கும் நடவடிக்கை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி சார்பில் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Velmurugan condemns to ban crackers in Delhi

தமிழகப் பொருளியலை முடக்கப்பார்க்கும் இத்தகைய சதியினை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதற்கு முடிவுகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மனித வாழ்க்கையைப் பொறுத்தவரையில் "மிஞ்சுவது எதுவுமில்லை" என்று தோன்றினால், இருக்கிறவரையில் கொண்டாட்டங்கள்தான் மிச்சம் என்றும் தோன்றும். அந்த வகையில்தான் தீபாவளிக் கொண்டாட்டம் என்பதும்!

தீபாவளிக் கொண்டாட்டமென்றால் பட்டாசு இல்லாமலா?

ஆம். அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது டெல்லிப் பட்டணவாசிகளுக்கு!

தலைநகர் டெல்லியில் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது; பட்டாசு விற்க உரிமம் வழங்கக்கூடாது என்று உரிமத்தையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளி முடிந்த மறுநாளன்று வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் என்பவரும் டெல்லியின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

தீபாவளிப் பட்டாசு வெடிப்பால் டெல்லியில் சுவாசிக்க முடியாத அளவுக்கு, அதாவது அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல மடங்கு அதிகமாக காற்றில் மாசுக்கள் நிறைந்திருப்பதாகவும்; இப்படி காற்று மாசுபடுவதைத் தடுக்க, பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Velmurugan condemns to ban crackers in Delhi

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'டெல்லியில் இனி தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக்கூடாது' என 2016 நவம்பர் 11ந் தேதியன்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில் "தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காமலிருந்தால் காற்றின் தரம் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு, அக்டோபர் 31 வரை டெல்லியில் பட்டாசுகள் விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டிருந்தது.

இந்தத் தடை உத்தரவு 2016 செப்டம்பர் 12ந் தேதி தளர்த்தப்பட்டது. ஆனால் வழக்குரைஞர் அர்ஜுன் கோபால் என்பவர் தடையை நீடிக்க வேண்டும் என்று மனு அளிக்கவே, அதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், 2017 நவம்பர் 1ந் தேதி வரை தடையை நீட்டித்திருப்பதோடு பட்டாசு விற்பதற்கான உரிமத்தையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடை டெல்லிவாசிகளுக்கு ஏற்புடையதுதானா என்பது ஒருபுறமிருக்க, இந்தப் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சிவகாசி மற்றும் சுற்றுப்பட்டிவாசிகளுக்கு நிச்சயம் ஏற்புடையதாயில்லை; இது தமிழகப் பொருளியலை முடக்கப் பார்க்கும் சதியோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை.

இந்தத் தடையால் சிவகாசிப் பட்டாசுத் தொழிலுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்.

இந்தியாவில் 85 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில்தான் நடக்கிறது. ஓர் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.7,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சிவகாசிப் பட்டாசு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது; இந்தியா முழுமைக்குமான பட்டாசுத் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

பட்டாசுக்கு இதுவரை 14.5 சதவீத வரிதான் இருந்தது. இப்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது. இது பட்டாசு விற்பனையைக் குறைத்துள்ளது. இதோடு டெல்லியில் பட்டாசுக்குத் தடை போட்டிருப்பது விற்பனையில் மேலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் டெல்லியிலிருந்து வரும் கொள்முதல் ஆர்டர்கள் அனைத்தும் நின்றுபோய் சிவகாசியில் பட்டாசுகள் தேங்கியுள்ளன. இந்தத் தேக்கம் 40 சதவீத அளவுக்கு இருக்கும் என்கிறார்கள் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

இதற்கிடையில் சீனப் பட்டாசை தமிழக கூட்டுறவுக் கடைகள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்வதாக ஊடகத்தில் செய்தி வெளியானது. சீனப் பட்டாசு இறக்குமதிக்குத் தடை இருந்தும் சட்டவிரோதமாக அதை விற்பனை செய்வது எப்படி?

இதையெல்லாம் பார்க்கும்போது பெருத்த சந்தேகமே நமக்கு எழுகிறது; அது, தீபாவளிப் பட்டாசு வெடிக்க தலைநகர் டெல்லியிலேயே தடை என்பது தமிழகப் பட்டாசு உற்பத்தித் தொழிலையே ஒழித்திடத்தானோ என்கிற சந்தேகம்தான்!

சீனப் பட்டாசைக் கொண்டுவரத் தடை இருந்தும் தமிழகக் கூட்டுறவுக் கடைகளில் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் அது விற்கப்படுறதென்றால் இந்த சட்டவிரோதச் செயலுக்கு என்ன தான் அல்லது யார்தான் காரணம்?

தமிழகப் பொருளியலை முடக்கப்பார்க்கும் சதிகளாகவே இவற்றைப் பார்க்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதற்கு முடிவுகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது வாழ்வுரிமைக் கட்சி!

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதற்கு முடிவுகட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது வாழ்வுரிமைக் கட்சி என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilar Vazhvurimai party chief Velmurugan condemns to ban crackers in Delhi. He also said that it is move to abolish cracker industry.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X