வானொலிகளில் தமிழ் செய்தி ஒலிபரப்பை நிறுத்த வேல்முருகன் கடும் எதிர்ப்பு
சென்னை: அரசு வானொலிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் செய்தி ஒலிபரப்பை நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் செய்தி சேவைகளை மத்திய அரசு நிறுத்தப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருச்சி, இந்தூர், பூஜ், கோழிக்கோடு உள்ளிட்ட வானொலி நிலைய செய்திகள்,நிகழ்ச்சிகள் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநில மொழி செய்திகளை மூடுகிற மத்திய அரசின் திட்டம் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. இங்கு ஒரு மொழிதான் ஆதிக்க செலுத்த முடியும் என்பதை எந்த ஒரு தேசிய இனமும் ஏற்காது.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதலே சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை முழுவீச்சில் இந்தியாவின் ஒற்றைமொழியாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கக் கூடிய ஒன்று பல்வேறு தரப்பினரும் எச்சரித்தும் மத்திய பாஜக அரசு ஒற்றை இந்தியா- இந்தி என்ற திசைவழியில் பயணத்தைத் தொடர்கிறது.
இதன் ஒரு கட்டமாகவே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் வானொலி செய்தி சேவைகளை நிறுத்திவிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தற்போது திருச்சி வானொலியில் செய்தி ஒலிபரப்பு தொடரும் என அறிவித்திருக்கும் மத்திய அரசின் அறிவிக்கையிலும் கூட 'மறு உத்தரவு' வரும் வரை என கூறியிருப்பது எதிர்காலத்தில் நிச்சயம் தமிழ் வானொலி செய்திகளை இழுத்துமூடத்தான் போகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
தமிழகத்தின் வாழ்வுரிமை பிரச்சனைகளில் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு தற்போது என்.எல்.சி.யில் நெய்வேலி பெயர் நீக்கம், புதிய கல்விக் கொள்கை, தமிழ் செய்தி ஒலிபரப்பு நிறுத்தம் என அடுத்தடுத்து தமிழின அடையாள அழிப்புகளில் தீவிரம் காட்டுவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ் வானொலி செய்தி ஒலிபரப்பை இழுத்து மூடும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் நிலையை நோக்கித்தான் செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications