பாரம்பரியத்தை மறவோம்.. மண்புழு உரங்களை இடுவோம்..!
சென்னை: தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்வதே பெரும் சவாலாக உள்ளது. விதை விலை, உர விலை, ஆள் கூலி, பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை என விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் அனைத்து இடுபொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே இவற்றை சாமாளிக்க விவசாயிகள் மாற்று வழிகளை கையாள வேண்டும். இன்னும் சொல்லபோனால் மாற்று வழிகள் என்பதை விட, இயற்கை முறை அல்லது நமது முன்னோர்களின் பாரம்பரிய முறைகளை கையாள வேண்டும். உதாரணமாக, மக்கிய தொழு உரங்களை உற்பத்தி செய்வது, இயற்கை பூச்சி விரட்டிகள், மூலிகை பூச்சி கொல்லி மருந்துகளை, நாமே தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் விவசாய செலவுகளை குறைக்க முடியும். மேற்சொன்ன வழியில், கால்நடை கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
மாட்டின் சாணம், தீனிக் கழிவுகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு இயற்கை முறையில் சத்தான மண்புழு உரம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மண்புழு உரம் தயாரிப்பதற்கு மண்புழுக்கள், மாட்டின் சாணம்,மாட்டுத் தீவனக் கழிவுகள், கொஞ்சம் வெள்ளம், ஒரு பெரிய தொட்டித் தண்ணீர். மாடுகளின் சாணம் 10-20 நாட்கள் பழையதாக இருக்க வேண்டும். உரம் தயாரிக்க பயன்படும் பொருட்களில் தாதுக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் ஆகியன இருக்க கூடாது.
மண்புழுக்களில் நிறைய வகை இருந்தாலும் சிவப்புநிற மண் புழுக்கள்தான் உரம் தயாரிக்க உகந்தவை. மண் புழுக்களை மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் வாங்கலாம் அல்லது நமக்கு தேவையான மண்புழுக்களளைநாமே உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும்

மண்புழுகளை உற்பத்தி செய்யும் முறை:
மண்புழுகளை உற்பத்தி செய்வது மிகவும் எளிது.10 கிலோ சாணத்தை எடுத்துக் கொண்டு 2 கிலோ வெல்லத்துடன் கலக்கி,நல்ல ஈரப்பதமான இடத்தில் இந்தக் கலவையை மண் தரையில் கொட்டிவை .ஒரு பத்து நாட்களுக்குத தண்ணீர் தெளித்து கொண்டு வந்தால் மண்புழுக்கள் தானே உருவாகும் .இந்த மண் புழுக்களை சேகரித்து மண்புழு உரம் தயாரிக்கலாம்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை:
மண்புழு உரம் தயாரிக்க படுக்கை முறை, குழி முறை, தொட்டி முறை என 3 முறை உள்ளது. படுக்கை முறையில் தரையில் இயற்க்கை சாணத்தையும் மற்ற கழிவுகளையும் போடா வேண்டும். இதில் அதிக அளவு மண்புழு உரம் தயாரிக்கலாம். குழி முறையில், குழி வெட்டி அடியில் சாணம் மற்றும் இதர தீவனக் கழிவுகளை போடலாம். ஆனால் குழிமுறையில் போதுமான காற்றோட்டம் இருக்காது. செலவும் அதிகம். தொட்டி முறை தான் நடுத்தர விவசாயிகளுக்கு சிறந்த முறை.

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை:
மண்புழு உரம் தயாரிக்க எப்போதும் நிழல், ஈரப்பதம், குளிர்ச்சி நிறைந்த பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 500-600 லிட்டர் கொள்ளளவு உள்ள சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக் தொட்டியை வாங்கலாம். அல்லது உங்கள் வீட்டில் தொட்டி இருந்தால் அதையே பயன்படுத்தி கொள்ளலாம்.மாடுகளின் சாணம் மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கிய பசுந்தீவனக் கழிவுகள், உலர்ந்த இலைகள் 3:1 என்ற அளவில் கலந்து தொட்டிகள் போட வேண்டும். 15-20 நாட்களுக்கு இந்தக் கலவையை அப்படியே விட்டுவிட வேண்டும்.சிறிதாக நறுக்கிய இலைகள் மற்றும் பசுந்தீவனத்தை 15-2௦ செ.மீ அளவுக்கு போட வேண்டும். அதற்குமேல் மாடுகளின் சாணம், இதர கழிவுகளை அதே அளவு போட வேண்டும். மண்புழுக்களை 500-1000 எண்ணிகையில் மேல் அடுக்கில் விடனும்.மண்புழுக்களை விட்டவுடன் குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும். இந்த உள் அடுக்குகள் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருக்க தொடர்ந்து குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும். 3௦ நாட்களுக்கு ஒரு முறை கிளறி விட வேண்டும். 45- 5௦ நாட்கள் ஆனவுடன் மண்புழு உரம் தயாராகிவிடும்.

மண் புழு உரம் அறுவடை செய்யும் முறை:
மண்புழு உரம் தயாரானவுடன் அது கருப்புநிறத் துகள்களாக மாறிவிடும். அதன்பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும். மேலும் உரம் தயாரிக்கும் இடத்துக்கு அருகில் புதிய சாணத்தை வெல்லத்துடன் கலந்து (1௦ கிலோ சாணம் + 1 கிலோ வெல்லம்) நீர் தெளித்து வைத்தால் இந்த மண்புழு உரத்திலுள்ள மண்புழுக்கள் அருகில் உள்ள புதிய சாணம் மற்றும் வெல்லக் கலவைக்குச் சென்று விடும். இரண்டு நாட்கள் சென்றபின் மண்புழு உரத்தை பயன்படுத்திக்கலாம்.
மண்புழு உரம் இடும் முறை: மண்புழு உரத்தின் அளவு பயிர்களின் தன்மையைப் பொறுத்தது. விவசாய பயிர்களுக்கு, ஒரு ஹெக்டருக்கு 2-3 டன் அளவும், பழ மரங்களுக்கு, மரத்தின் வயதை பொறுத்து, 5 முதல் 1௦ கிலோ வரை ஒரு மரத்திற்கு இடவேண்டும்.காய்கறி செடிகளுக்கு, நாற்றுகள் வளர்ப்பதற்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு டன் அளவும், வளரும் செடிகளுக்கு 400-500 கிராம் பயன்படுத்தலாம். பூச்செடிகளுக்கு, ஒரு ஹெக்டருக்கு 750-1000 டன் வரை பயன்படுத்தலாம்.
இந்த கட்டுரை பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும், இப்கோ கிஸானின் சேவையை உங்கள் மொபைலில் பெற நினைத்தாலும் 534351 அல்லது 9791735144 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மேலும் "IFFCO KISAN" என்ற மொபைல் அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தகவல்: டி. சந்திரலேகா எம்.எஸ்.சி (அக்ரி)
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications