ஐபிஎல்லை ஒத்திவையுங்கள், மீறினால் விளையாட்டாக இருக்காது... பாரதிராஜா எச்சரிக்கை!
ஐ.பி.எல் போட்டிகளை ஒத்திவையுங்கள் மீறி நடந்தால் அது ஐ.பி.எல் விளையாட்டாக இருக்காது என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகைளை ஒத்திவையுங்கள் மீறி நடத்தினால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார். தமிழா ஐ.பி.எல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி, நிறைய வேண்டியது மைதானத்தின் இருக்கைகள் அல்ல புரட்சியின் மைதானம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டால் போராட்ட கவனம் திசை திரும்பி விடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது மீறி நடத்தினால் மைதானத்தை முற்றுகையிடுவோம், கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நிராகரிப்போம் ஐபிஎல் போட்டியை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் இனத்தை அழித்தார்கள் நாம் எதுவும் பேசவில்லை, நம் மொழியை சிதைக்கிறார்கள் நாம் மவுனமாக இருக்கிறோம். நம் உரிமைகள் பறிக்கப்படும் போதும் போராடாமலே இருக்கிறோம், உறைந்து போய்க்கிடக்கும் நம்முடைய உணர்வுகளை உசுப்பிவிட்டு நம்மைப் புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கும் போது ஐபிஎல் எனும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசியப் புரட்சிக்குத் தீ வைக்கும் முட்டாள்த்தனமான விளையாட்டை நிராகரிப்போம்.

நிறைய வேண்டியது புரட்சியின் மைதானம்
தமிழ் மக்களின் ஒற்றுமை கருக்கூடி வரும்போது கருக்கலைப்பு செய்ய வரும் எந்தவொரு நிகழ்வுக்கும் தடை விதிப்போம். தமிழா ஐபிஎல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி,. நிறைய வேண்டியது விளையாட்டு மைதானத்தின் இருக்கைகள் அல்ல புரட்சியின் மைதானம்.

ஒத்திவையுங்கள்
தமிழனை விளையாட்டாக நினைத்து கிரிக்கெட் விளையாட்டைப் புகுத்தும் மூடர்களே எங்கள் தமிழர்களுக்கு வீரவிளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை கொஞ்சம் ஒத்திவையுங்கள் மீறி நடந்தால் அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.

இன உணர்வோடு சொல்கிறேன்
மாறாக எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளோடு களம் காணுவார்கள். இதனைத் தமிழ் இன உணர்வோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications