மன்னார்குடியில் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது விக்னேஷ் உடல் #vignesh
சென்னை: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு நாளை மன்னார்குடியில் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியில் தீக்குளித்த தம்பி பா.விக்னேசு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அனைத்து கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன் உயிர் ஈந்த ஈக மறவன் காவிரிச்செல்வன் தம்பி பா. விக்னேஷ் அவர்களின் உடல் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று (16-09-2016) இரவு 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இன்றிரவு அவரது உடல் தம்பியின் சொந்தஊரான மன்னார்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு நாளை (17-09-2016) காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவரது வீட்டின் முகவரி:
பா. விக்னேசு,
த/பெ பாண்டியன்
கோபால சமுத்திரம் மேலவீதி,
மன்னார் குடி,
திருவாரூர் 614001
இதற்காக தம்பியின் உடலை எடுத்துச்செல்ல காவல்துறையின் அனுமதி கிடைத்துவிட்டதால் அனைவரும் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் அஞ்சலி செலுத்தக் கூடுவோம்!
-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications