கூட்டணி தலைவர்கள், சின்னங்கள் பெயரை சரியாக சொல்லிய விஜயகாந்த்! மீசையெடுப்பாரா ஆனந்தராஜ்?
நெல்லை: வள்ளியூர் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை சரியாக ஞாபகப்படுத்தி கூறி அசத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். எனவே, இதுகுறித்து சவால் விடுத்த அதிமுக பேச்சாளர் ஆனந்தராஜ் மீசையை (வளர்த்தாவது) அகற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சின்னத்தையும், தலைவர்கள் பெயரையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரியாக சொல்லிவிட்டால் தனது ஒருபக்க மீசை எடுத்துக்கொள்வதாக நடிகரும், அதிமுக பேச்சாளருமான ஆனந்தராஜ் சவால் விடுத்தார்.
வேலூர் மாவட்டம் ராணிபேட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோதும், இரு நாட்கள் கழித்து, திருவாரூரில் பிரசாரம் செய்தபோதும், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மரியாதை
இந்த விஷயம் தேமுதிகவினரின் சுயமரியாதையை சீண்டிவிட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்த்தின் கவனத்திற்கும் பிரேமலதா இதை கொண்டு சென்றுள்ளார்.

ரெடியான விஜயகாந்த்
ஆனந்தராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுக்க விஜயகாந்த் முடிவெடுத்தார். எனவே கூட்டணி தலைவர்கள் பெயர்களையும், சின்னங்களையும் மனதுக்குள் வாசித்து பார்த்து ரெடியாகிக்கொண்டார்.

சரியாக சொன்னார்
நேற்று வள்ளியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன், வாசன் ஆகியோரின் பெயர்களையும், சின்னங்களையும் அவர் வேண்டுமென்றே மேடையில் பேசிக்காட்டினார்.

கொஞ்சம் தயக்கம்
இதில் வாசன் பெயரை மட்டும் கொஞ்ச நேரம் யோசித்தார். ஆனால் யாருடய உதவியும் இல்லாமல் அதையும் விஜயகாந்த்தே சொல்லிவிட்டார். மேலும், யாருடைய உதவியும் இல்லாமல் அவராகவே நடந்து காரில் சென்று ஏறினார்.

மீசை
ஆனந்தராஜ் சவால் விடுத்த நிலையில் அதை விஜயகாந்த் எப்படியோ நிறைவேற்றிவிட்டார். எனவே, ஆனந்தராஜ் மீசையை எடுப்பாரா என தேமுதிகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். "ஆனந்தராஜே ஒப்புக்கொண்டபடி அவருக்கு மீசையில்லைதான். ஆனால் அதை வளர்த்தாவது பிறகு எடுத்துவிடுவாரா?" என்று கேட்கிறார் தேமுதிக நிர்வாகி ஒருவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications