மீடியாவுக்கு "நோ" சொன்ன "கேப்டன்" ... அப்பா, அம்மா, தம்பியுடன் செல்பி எடுத்த "பிரபாகரன்"
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வாக்களித்து விட்டு வீடு திரும்பியதும் செல்பி எடுத்துள்ளார். அதனை விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியில்தான் விஜயகாந்த் குடும்பத்துக்கு வாக்கு உள்ளது. அங்கு இன்று காலை விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என அனைவரும் சென்று வாக்களித்தனர்.

ஸ்டாலின், அஜித் என பிரபலங்கள் எல்லாம் தாங்கள் வாக்களித்து விட்டோம் என்பதற்கு சாட்சியாக தங்களது கை விரலில் மை இடப்பட்டுள்ளதை ஊடகங்களுக்கு காட்டியபடி, போஸ் கொடுத்தனர்.
ஆனால், தான் வாக்களித்ததும் அவ்வாறு செய்ய மறுத்த விஜயகாந்த், பேட்டியும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் விஜயகாந்த் கோபத்தில் இருப்பதாகவும், சோகத்தில் இருப்பதாகவும் பல்வேறு ஊகங்கள் உலா வந்தன.
இந்நிலையில், வாக்களித்த பின் வீட்டிற்கு சென்ற விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். இதில் விஜயகாந்த் சிரித்த முகமாகக் காட்சி அளிக்கிறார்.
இந்தப் புகைப்படத்தை விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே, ‘அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவது முக்கியம். நாங்கள் செய்து விட்டோம்... நீங்கள்?' என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications